விஜய்சேதுபதியின் 'மாமனிதன்' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: புதிய தேதி என்ன?

நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையிலும் சமீபத்தில்தான் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் பெற்றிருந்தார் என்பதையும், இந்த படத்தை அவர் மே 6ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ‘மாமனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படம் மே 6ஆம் தேதி ரிலீசாகும் என்றும் ஆர்கே சுரேஷ் நடித்து தயாரித்த 'விசித்திரன்’ திரைப்படம் மே 20ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இதில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது .

இதன்படி ஆர்கே சுரேஷின் ‘விசித்திரன்’ படம் மே 6 ஆம் தேதியும், விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ திரைப்படம் மே 20ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டு படங்களின் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.