7 படங்கள் ரெடி, 8வது படத்தையும் முடிக்க தயாராகும் விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Wednesday,November 18 2020]

இந்திய திரையுலகில் அனேகமாக ஒரே நேரத்தில் பத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடிக்கும் நடித்து வரும் ஹீரோ விஜய்சேதுபதி ஒருவராகதான் இருப்பார். அவர் நடித்த ’மாஸ்டர்’ ’மாமனிதன்’ ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ’லால்சிங் சாத்தா’, ’கடைசி விவசாயி’ மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய ஆறு திரைப்படங்களும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது

இந்த நிலையில் அடுத்ததாக தற்போது ’லாபம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து அவரது எட்டாவது படமும் ரிலீஸுக்கு தயாராகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஸ்ருதிஹாசன் ஜோடியாக ஜோடியாக சேர்ந்து நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக், பிக் பாஸ் புகழ் டேனியல் உட்பட பலர் நடித்து வருகின்றனர். எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது