இங்க அடிச்சா மும்பையில அடிவிழும்: 'லாபம்' டிரைலர் விமர்சனம்
- IndiaGlitz, [Saturday,August 22 2020]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கிய ’லாபம்’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. எஸ்பி ஜனநாதனின் வழக்கம்போல் புரட்சிகரமான கருத்துக்கள் கொண்ட இந்த திரைப்படம் நிச்சயம் தமிழ் திரையுலகில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதுவரை விவசாயிகள் பிரச்சனை குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சாதாரண விவசாயி போர்க்கொடி தூக்கினால் மும்பை, லண்டன், அமெரிக்கா உள்பட உலக மார்க்கெட் எப்படி திண்டாடும் என்பதை தனது பாணியில் வித்தியாசமாக இயக்கியுள்ள திரைப்படம் தான் இந்த ’லாபம்’
மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனமும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘தொழிற்சாலைகள் இயங்கினால் தான் இங்கே விவசாயமும் மக்களும் வாழ முடியும் என்று நம்மை நம்ப வைத்து விட்டார்கள். ஆனால் விவசாயம் செய்தால் மட்டுமே இங்கே தொழிற்சாலைகள் இயங்க முடியும். அதுதான் உண்மை. இந்த மண்ணில்தான் எல்லா தொழிற்சாலைக்கும் தேவையான மூலப்பொருட்கள் விளைகின்றது. அதை வாங்கி வியாபாரம் செய்ற அத்தனை பேரும் லாபம் பார்க்கிறார்கள். ஆனால் வசாயம் செய்யும் விவசாயிகள் மட்டும் நஷ்டத்தை சந்தித்து தூக்குல தொங்கி செத்துக் கொண்டிருக்கின்றான்’ என்ற ஒரு வசனம் ஒரு பானை சோற்றுக்கு சமம்
மொத்தத்தில் ‘லாபம்’ திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மட்டுமன்றி தமிழ் சினிமாவுக்கே ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இரண்டு நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த டிரைலரே இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும் போது படம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்