தண்ணியையும் காத்தையும் வச்சுதான் மொத்த உலக அரசியலும் நடக்குது: க/பெ ரணசிங்கம் டீசர்
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ஒரு நிமிடம் 40 நொடிகள் ஓடும் இந்த டீஸரில் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் கிராமத்து மக்களுக்கும் இடையே நடக்கும் தண்ணீர் பிரச்சனை தான் கதை என்று தெரிகிறது
விஜய் சேதுபதி கிராமத்து மக்களுக்காக போராடும் போராளியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது மனைவியாகவும் நடித்துள்ளனர். சாதி, மத அரசியலையும் தாண்டி, இன்றைக்கு உலகமே தண்ணியையும் காத்தையும் வச்சுதான் அரசியல் செய்றாங்க என்ற வசனத்தோடு இந்த படத்தின் டிரைலர் ஆரம்பிப்பதில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது
ஒரு அரசாங்கமும் அரசு ஊழியர்களும் நினைத்தால் ஏழை எளிய அப்பாவி மக்களையும் போராடு குணம் கொண்டவர்களையும் எந்த அளவுக்கு ஆட்டிப்படைக்கலாம் போன்ற காட்சிகளும், அதே நேரத்தில் ஏழை எளிய மக்கள் வெகுண்டு எழுந்தால் என்ன நடக்கும் என்பதும் இந்த டீசரில் உள்ளது. ‘ரேஷன் கார்டுல இருந்து பேரை எடுத்துடுவிடியா, நாங்க இந்தியாவிலேயே இல்லைன்னு சொல்லிக்கோ போ’ என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் வசனம் திடுக்கிட வைக்கின்றது. மாவட்ட கலெக்டராக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, கண்களாலே நூற்றுக்கணக்கான வசனத்தை பேசிவிடுகிறார். ஜிப்ரானின் இசை படத்திற்கு வலு சேர்க்கின்றது. மொத்தத்தில் விருமாண்டியின் இயக்கத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான, எழுச்சியான படம் தான் க/பெ ரணசிங்கம் என்பது இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments