தண்ணியையும் காத்தையும் வச்சுதான் மொத்த உலக அரசியலும் நடக்குது: க/பெ ரணசிங்கம் டீசர்

  • IndiaGlitz, [Saturday,May 23 2020]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ஒரு நிமிடம் 40 நொடிகள் ஓடும் இந்த டீஸரில் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் கிராமத்து மக்களுக்கும் இடையே நடக்கும் தண்ணீர் பிரச்சனை தான் கதை என்று தெரிகிறது

விஜய் சேதுபதி கிராமத்து மக்களுக்காக போராடும் போராளியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது மனைவியாகவும் நடித்துள்ளனர். சாதி, மத அரசியலையும் தாண்டி, இன்றைக்கு உலகமே தண்ணியையும் காத்தையும் வச்சுதான் அரசியல் செய்றாங்க என்ற வசனத்தோடு இந்த படத்தின் டிரைலர் ஆரம்பிப்பதில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது

ஒரு அரசாங்கமும் அரசு ஊழியர்களும் நினைத்தால் ஏழை எளிய அப்பாவி மக்களையும் போராடு குணம் கொண்டவர்களையும் எந்த அளவுக்கு ஆட்டிப்படைக்கலாம் போன்ற காட்சிகளும், அதே நேரத்தில் ஏழை எளிய மக்கள் வெகுண்டு எழுந்தால் என்ன நடக்கும் என்பதும் இந்த டீசரில் உள்ளது. ‘ரேஷன் கார்டுல இருந்து பேரை எடுத்துடுவிடியா, நாங்க இந்தியாவிலேயே இல்லைன்னு சொல்லிக்கோ போ’ என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் வசனம் திடுக்கிட வைக்கின்றது. மாவட்ட கலெக்டராக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே, கண்களாலே நூற்றுக்கணக்கான வசனத்தை பேசிவிடுகிறார். ஜிப்ரானின் இசை படத்திற்கு வலு சேர்க்கின்றது. மொத்தத்தில் விருமாண்டியின் இயக்கத்தில் ஒரு உணர்ச்சிபூர்வமான, எழுச்சியான படம் தான் க/பெ ரணசிங்கம் என்பது இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
 

More News

எம்ஜிஆர், சிவாஜி பட நடிகையின் மகன் தற்கொலை!

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 'கண்ணன் என் காதலன்' 'தலைவன்' 'ஊருக்கு உழைப்பவன்' உள்பட ஒரு சில படங்களிலும், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த 'வசந்த மாளிகை' 'வாணி ராணி' 'ரோஜாவின் ராஜா

குழந்தைகளுக்குக் காய்ச்சல் வருவதுகூட ஒருவகையில் நல்லதுதான்!!! ஏன் இப்படி சொல்றாங்க தெரியுமா???

சிறுவயது குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான்: செல்வராகவன்

'துள்ளுவதோ இளமை' முதல் 'என்ஜிகே' வரை பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் செல்வராகவன் அவர்கள் ஏற்கனவே இயக்கி முடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை'

4 மண்டலங்களில் 1000க்கும் மேல், 2000ஐ நெருங்கும் ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குவதால்

நான் யாரையும் ஏமாத்தலை, பெண்களாகத்தான் என்னிடம் வந்து விழுந்தாங்க: காசியின் பகீர் வாக்குமூலம்

தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் என் உடம்பு பெண்களுக்கு பிடித்திருந்ததால் அவர்களாகவே என்னிடம் வந்து விழுந்தார்கள் என்றும் அதனால் நான் அவர்களுடன் ஜாலியாக இருந்தேன்