அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த விஜய்சேதுபதியின் 'ஜூங்கா'

  • IndiaGlitz, [Tuesday,March 06 2018]

ஒவ்வொரு ஆண்டும் அதிக திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி அதில் பெரும்பாலானவை ஹிட் படங்களாக கொடுத்து வரும் நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவர் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றான 'ஜூங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பட இயக்குனர் கோகுல் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா, மடோனா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். விஜய்சேதுபதியின் சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு டட்லி ஒளிப்பதிவும், சாபு ஜோசப் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

More News

இன்று லெனின் சிலை, நாளை பெரியார் சிலை: எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு

திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த பாஜக, வரும் 8ஆம் தேதி தான் பதவியேற்கவுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே பாஜகவினர் அந்த மாநிலத்தில் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக

ஆஸ்கார் இல்லாவிட்டால் என்ன? அள்ளி அள்ளி வழங்கப்பட்ட பரிசுகளால் திணறிய நட்சத்திரங்கள்

நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் விருதுகளை பெற்ற நட்சத்திரங்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் என்பதும் தெரிந்ததே

திருத்திக்கொள்க, இல்லையேல்...ஊடகங்களுக்கு கமல் எச்சரிக்கை

ஊடக நண்பரே! டாஸ்மாக்குக்கு (TASMAC) கமல் ஆதரவு என்ற செய்தி தவறு. திருத்திக்கொள்க. இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவீர்'

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர செய்தி

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வரும் நிலையில் அன்று முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை

அனல் பறந்த ரஜினியின் முதல் அரசியல் பேச்சு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து சுமார் 45 நிமிடங்கள் பேசினார்