விஜய்சேதுபதியின் 'டிஎஸ்பி' படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘டிஎஸ்பி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த பாடலை செந்தில் மற்றும் உதித் நாராயணன் ஆகியோர் பாடிய நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
இந்த நிலையில் ‘டிஎஸ்பி’ திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டிஎஸ்பி’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ் ,பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்பட பலரது நடிப்பில் உருவாக்கிய இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையில் உருவாகி இந்த படம் விஜய்சேதுபதியின் இன்னொரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vijay Sethupathy starrer #DSP releasing worldwide on December 2nd! Directed by Ponram and Produced by Stone Bench Films! Certified U/A by Censor Board! A #DImmanMusical #NallIrumaa
— D.IMMAN (@immancomposer) November 20, 2022
Praise God! pic.twitter.com/SWy1iXZwpg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments