விஜய்சேதுபதி மகள் நடித்த 'முகிழ்' டீசர் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Tuesday,October 05 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி ஆகிய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் ஸ்ரீஜா விஜய்சேதுபதி நடித்த ‘முகிழ்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே ஓடும் இந்த படத்தின் டீசரில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் ஸ்ரீஜா நடித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதும் இந்த காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, ரெஜினா, விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து உள்ளார் என்பதும் இந்த படத்தை கார்த்திக் சுவாமிநாதன் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேவா இசையில் சத்திய பொன்மார் ஒளிப்பதிவில் கோவிந்தராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜய் சேதுபதியின் மகன் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் மகளும் நடிக்க வந்ததை அடுத்து கிட்டத்தட்ட விஜய் சேதுபதியின் குடும்பமே திரை உலகிற்கு வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.