விஜய்சேதுபதியின் 'குட்டி ஸ்டோரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’குட்டி ஸ்டோரி’ என்ற பாடல் தாறுமாறான ஹிட் ஆன நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் ’குட்டி ஸ்டோரி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
விஜய் சேதுபதி, அமலாபால், அதிதிபாலன், வருண், மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த ஆந்தாலஜி திரைப்படம் ‘குட்டி ஸ்டோரி. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் 4 பகுதிகள் உள்ளன என்பதும் இந்த பகுதிகளை கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் விஜய்சேதுபதி மற்றும் அதிதி பாலன் பகுதியை நலன்குமாரசாமி இயக்கியுள்ளார். அதேபோல் கௌதம் மேனன் மற்றும் அமலாபால் பகுதியை கெளதம் மேனனும், வருண்- மேகா ஆகாஷ் பகுதியை விஜய்யும், சாக்சி அகர்வால் பகுதியை வெங்கட்பிரபுவும் இயக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ’குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் வெளியிட்டு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி உள்பட பெரியதிரை நட்சத்திரங்களின் இந்த ஆந்தாலஜி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Happy to share the First Look of #KuttiStory, An anthology Produced by @VelsFilmIntl @IshariKGanesh Dir by #NalanKumaraswamy#KuttiStoryFromFeb12#ItsAllAboutLove #KuttiStoryFirstLook @AditiBalan @sreekar_prasad @Ashkum19 pic.twitter.com/gfj4BhJS5d
— VijaySethupathi (@VijaySethuOffl) February 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments