விஜய்சேதுபதியின் 'அனபெல்லா சேதுபதி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!


Send us your feedback to audioarticles@vaarta.com


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றில் வெளியாக இருப்பதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ திரைப்படம் திரையரங்குகளிலும் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி மற்றும் அனபெல்லா சேதுபதி ஆகிய திரைப்படங்கள் ஓடிடியிலும் வெளியாக இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த ’அனபெல்லா சேதுபதி’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
விஜய் சேதுபதியின் ’அனபெல்லா சேதுபதி’ படத்தின் நாயகியான டாப்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பழம்பெரும் இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்சேதுபதி, டாப்சி, ராதிகா, யோகி பாபு, கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
