விஜய்சேதுபதிக்கு மலேசியாவில் கிடைத்த ஏமாற்றம்.. 'ஏஸ்' படத்தின் புதிய அப்டேட்..!

  • IndiaGlitz, [Monday,May 27 2024]

விஜய் சேதுபதி நடித்து வரும் 51 வது படமான 'ஏஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மலேசியாவில் நடந்தது என்பதும் கிட்டத்தட்ட முழு படமும் மலேசியாவில் தான் படமாக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

இந்த நிலையில் மலேசியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த போது மலை மீது உள்ள முருகன் கோவிலில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டதாகவும் ஆனால் மலைக்கோவிலின் அடிவாரத்தில் மட்டுமே படம் பார்க்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏராளமான படிகள் கொண்ட மலையில் ஏறி முருகனை தரிசிக்க விஜய் சேதுபதி விரும்பியதாகவும் ஆனால் அதிக கூட்டம் காரணமாக முருகனை தரிசனம் செய்யாமலேயே விஜய் சேதுபதி சென்னை திரும்பி விட்டது அவருக்கு ஏமாற்றமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டாக படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்டமாக தொழில்நுட்ப பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, முத்துக்குமார், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கி தயாரித்து உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கரன் ரவாத் ஒளிப்பதிவில், கோவிந்தராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள டைட்டில் வீடியோ வெளியானது என்பதும் இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை நமிதா? அவரே அளித்த விளக்கம்..!

தமிழ் திரை உலகில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ்  - சைந்தவி என அடுத்தடுத்து விவாகரத்து செய்திகள் வெளிய வந்து கொண்டிருக்கும் நிலையில்

KVN புரடொக்சன்ஸ் 'கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்' ஆடியோ பிசினஸ் விவரங்கள்.. இத்தனை கோடியா?

KVN புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, "கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

சுந்தர காண்டம்: மங்கள வாழ்வு தரும் மந்திர காண்டம்!

பிரபல ஆன்மீக பேச்சாளர் சிவ சதீஷ்குமார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கம்பராமாயணத்தின் ஒரு முக்கிய பகுதியான சுந்தர காண்டத்தின் சிறப்புகள் பற்றியும்,

'நைஸ் கேர்ள்'.. துபாயில் பிரபல நடிகையுடன் யூடியூபர் இர்பான்.. வைரல் புகைப்படம்..!

பிரபல யூடியூபர் மற்றும் குக் வித் கோமாளி போட்டியாளர் இர்பான் பிரபல நடிகையுடன் துபாயில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

பார் அருகே பிரபல நடிகர் சுட்டுக்கொலை.. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!

பிரபல ஹாலிவுட் நடிகர் தன்னுடைய காரில் திருட்டு போவதை தடுக்க முயற்சித்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.