விஜய்சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் .. மாஸ் வீடியோ ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Friday,May 17 2024]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என்று நேற்றே அறிவிப்பு வெளியான நிலையில் சற்று முன்னர் டைட்டில் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ’ஏஸ்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, முத்துக்குமார், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கி தயாரித்து உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கரன் ரவாத் ஒளிப்பதிவில், கோவிந்தராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள டைட்டில் வீடியோ மாஸாக இருப்பதை அடுத்து இந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது. வித்தியாசமான டைட்டில் கொண்ட இந்த படம் விஜய் சேதுபதியின் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தில் கேமியோ கேரக்டரில் பிரபல நடிகர்.. வேற லெவல் தகவல்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை 2' படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் சமீபத்தில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு மாஸ் நடிகரும்  கேமியோ   கேரக்டரில் இணைவதாக கூறப்படுகிறது.

LCUவுக்கு 'பிள்ளையார் சுழி' போட்ட லோகேஷ் கனகராஜ்.. ஒரே படத்தில் 4 படங்களின் கேரக்டர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் உள்ள கேரக்டர்களை வைத்து LCU குறும் படங்களை இயக்கி வருவதாகவும் இந்த குறும்படங்கள்

maira போச்சுன்னு நகர்ந்து வா.. கார்த்திக் குமாரின் 2வது மனைவியின் ஆவேச பதிவு..!  

பிரபல பின்னணி பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவி அம்ருதா ஸ்ரீனி

ஒரு வழியாக திருமண அறிவிப்பை வெளியிட்டாரா பிரபாஸ்? மணப்பெண் யார்?

நடிகர் பிரபாஸ் 44 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் செய்துள்ள ஒரு பதிவு அவரது திருமணம் குறித்து பதிவாக இருக்கும்

சுசித்ரா முன்னாள் கணவர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்.. என்ன காரணம்?

பாடகி சுசித்ரா சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்ததார் என்பதும், அந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் காவல் நிலையத்தில் புகார்