விஜய்சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் .. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என்று நேற்றே அறிவிப்பு வெளியான நிலையில் சற்று முன்னர் டைட்டில் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ’ஏஸ்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, முத்துக்குமார், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கி தயாரித்து உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கரன் ரவாத் ஒளிப்பதிவில், கோவிந்தராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள டைட்டில் வீடியோ மாஸாக இருப்பதை அடுத்து இந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது. வித்தியாசமான டைட்டில் கொண்ட இந்த படம் விஜய் சேதுபதியின் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Presenting the Title Teaser & First Look of #VJS51#ACE
— 7Cs Entertaintment (@7CsPvtPte) May 17, 2024
The Trump Card you have been waiting for!🔥
#MakkalSelvan #VijaySethupathi51
🔗 : https://t.co/xdjFH4TyW9 @VijaySethuOffl @7CsPvtPte @Aaru_Dir @justin_tunes @rukminitweets @iYogiBabu #BablooPrithiveeraj #KaranBRawat pic.twitter.com/VopcoXFCxb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments