விஜய் சேதுபதியின் 50வது படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? நாளை ஒரு சர்ப்ரைஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,May 28 2024]

ஒவ்வொரு பிரபல நடிகருக்கும் 50 வது படம் என்பது ஒரு முக்கியமான மைல்கல் என்ற நிலையில் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான ’மகாராஜா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாளை விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு செம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் 50 வது படமான ’மகாராஜா’ திரைப்படத்தை நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விதார்த் நடித்த ’குரங்கு பொம்மை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

’மகாராஜா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

More News

நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் கல்வி தான்யா.. விதார்த் நடித்த 'அஞ்சாமை' டிரைலர்..!

விதார்த் நடித்த 'அஞ்சாமை' என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் ஜோடியாகும் மமிதா பாஜூ.. இயக்குனர் யார் தெரியுமா?

மலையாள திரையுலகின் பிரபல நடிகையான மமிதா பாஜு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பிரேமலு' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக

சாமுத்திரிகா லட்சணம் என்பது என்ன? அதன்படி பெண் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா...?

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், திருவண்ணாமலை ஆழ்வார் அவர்கள், சாமுத்திரிகா சாஸ்திரம்

சன் டிவியில் பிக்பாஸ் கேப்ரில்லா நடிக்கும் புதிய தொடர்.. ஹீரோ யார் தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே சன் டிவி மற்றும் விஜய் டிவியில் போட்டி போட்டுக்கொண்டு புதிய சீரியல் ஆரம்பம் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் கேப்ரில்லா நடிக்கும் புதிய சீரியல் ஆரம்பமாக

விஜய் சேதுபதி அல்ல.. பாண்டிராஜ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியான நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக