வசூலை குவிக்கும் விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Saturday,June 15 2024]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமான ’மகாராஜா’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்கள் இந்த படத்தை கொண்டாடி விமர்சனம் செய்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் முன்பதிவு அபாரமாக இருந்த நிலையில் 4 கோடி ரூபாய் முன்பதிவில் மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது முதல் நாள் வசூல் மற்றும் 10 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாகவும் விஜய் சேதுபதிக்கு நிச்சயம் இது ஒரு சூப்பர் ஹிட் படம் என்றும் தெரியவருகிறது.

மேலும் உலகம் முழுவதும் 1915 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதாலும், பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாகவும் முதல் நாளை விட சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ’அரண்மனை 4’ ‘கருடன்’ ’மகாராஜா’ என அடுத்தடுத்து தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் வசூலில் வெற்றி பெற்று வருவது கோலிவுட் திரை உலகிற்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.