என் லட்சுமிய காணும், கண்டுபிடிச்சு கொடுத்துங்க.. இல்லைன்னா.. விஜய்சேதுபதியின் 'மகாராஜா' டிரைலர்..!

  • IndiaGlitz, [Thursday,May 30 2024]

விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ‘மகாராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய லட்சுமியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் லட்சுமி யார்? உன் மனைவியா? உன் குழந்தையா? உன்னுடைய பணமா? நகையா? என காவல்துறையினர் கேட்க, அது எதுவும் இல்லை என்று கூறும் விஜய்சேதுபதியால் லட்சுமி என்ன என்பதை விளக்க முடியாத காட்சிகள் இந்த டிரைலரில் உள்ளது.

இதனிடையே தொலைந்து போன லட்சுமியை விஜய் சேதுபதி கண்டுபிடித்தாரா? உண்மையில் தொலைந்து போன லட்சுமி என்ன? போன்ற கேள்விகளுக்கு இந்த படம் விடை கொடுக்கும் என்பதும், அந்த லட்சுமி என்ன என்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், பாரதிராஜா, அபிராமி, சிங்கம் புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா.. எங்கே? எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின்

பிரின்ஸ் துருவா சர்ஜாவின்  “மார்ட்டின்” திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும்  “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது

வருங்கால கணவரை தான் நடித்த திரைப்படத்திற்கு அழைத்து சென்ற தமன்னா.. வைரல் வீடியோ..!

நடிகை தமன்னா தனது வருங்கால கணவரை தான் நடித்த சூப்பர் ஹிட் படத்திற்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

காவி உடையுடன் இமயமலையில் ரஜினிகாந்த்.. தேர்தல் ரிசல்ட்டை மறைமுகமாக சொல்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்ற நிலையில் தற்போது இமயமலையில் அவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதே தயாரிப்பாளர்.. அதே இயக்குனர்.. அஜித்தின் 64வது படம் குறித்த தகவல்..!

அஜித் தற்போது 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய  இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அடுத்த படத்தில் இதற்கு முன் அவரை இயக்கிய இயக்குனர்