போட்டியாளர்களை திணறடித்த விஜய் சேதுபதி, பரபரப்பாக நகரும் பிக்பாஸ் சீசன் 8..!!

  • IndiaGlitz, [Tuesday,October 15 2024]

தமிழக மக்களின் உள்ளத்தை வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தை கடந்துள்ளது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிசோட் முதல் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இந்த முறை, ஹோஸ்டாக களமிறங்கிய நடிகர் விஜய் சேதுபதி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கி வருகிறார். வார முடிவில் எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சனைகளை நேரடியாக அணுகும், போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டுவிடும் அவரது தைரியம், பலரையும் ஈர்த்துள்ளது.

வாரம் முழுக்க வீட்டில் நடந்த சம்பவங்களின், முக்கிய தருணங்களை விவாதித்து, தவறுகளைப் போட்டியாளர்களிடம் சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை. வீட்டில் நடந்த சம்பவங்களின் பின்னணிகளை அலசுவதுடன், அதற்கான தீர்வுகளையும் அசத்தலாகச் சொல்லும் அவரது திறமை பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளது.

வீட்டில் ஆண்களிடம் ஒற்றுமை நிலவினாலும், பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லாததைச் சுட்டிக்காட்டி, அதைச் சரி செய்து கொள்ளவும் பரிந்துரைத்தார். போட்டியாளர்களை அன்பாக அணுகுவதும், அவர்களது தவறுகளை கடுமையாகக் கண்டிப்பதும் என அதிரடியில் மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி.

வார முடிவில் எலிமினேஷன் ரவுண்டில், இந்த முறை ரவீந்தர் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தை மிகக் கவனமாகக் கையாண்ட விஜய் சேதுபதி, மீதமுள்ள போட்டியாளர்களை பற்றிய தனது நேர்மையான கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆரம்பம் முதலே பல புதுமைகளுடன், எதிர்பாராத திருப்பங்களுடன், கலக்கலாக நடந்து வரும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியினை, உங்கள் விஜய் தொலைக்காட்சியில், 24/7 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.

More News

சஷ்டி விரதம்: 12 ராசிகளுக்கும் பலன்கள் - Tarot Reader Sara

பிரபல டாரோ ரீடர் சாரா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், கந்த சஷ்டி விரதம் பற்றி மிகவும் சுவாரஸ்யமான

'வேட்டையன்' படத்தின் 4 நாட்கள் வசூல் இத்தனை கோடியா? ஆனாலும் ஒரு சிக்கல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி, வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களின் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை

அரசியல் உள்பட எந்த வியாதியும் இல்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காமெடி நடிகர்..!

பிரபல காமெடி நடிகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில், அரசியல் உள்பட எந்த நோயும் தனக்கு இல்லை

'சூர்யா 45' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர் , இசையமைப்பாளர் இவர்கள் தான்..!

சூர்யாவின் 45வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் பற்றிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபேன் பாயாக இருந்தவன் இப்போது ஃபேமிலி பாய்.. 'வேட்டையன்' குறித்து ரக்சனின் பதிவு..!

"ஃபேன் பாயாக இருந்த நான் தற்போது ஃபேமிலி பாயாக மாறிவிட்டேன்" என்று ஆர்.ஜே. ரக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.