போட்டியாளர்களை திணறடித்த விஜய் சேதுபதி, பரபரப்பாக நகரும் பிக்பாஸ் சீசன் 8..!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக மக்களின் உள்ளத்தை வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தை கடந்துள்ளது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிசோட் முதல் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
இந்த முறை, ஹோஸ்டாக களமிறங்கிய நடிகர் விஜய் சேதுபதி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கி வருகிறார். வார முடிவில் எந்த தயக்கமும் இல்லாமல் பிரச்சனைகளை நேரடியாக அணுகும், போட்டியாளர்களின் தவறுகளை அவர்களிடமே கேட்டுவிடும் அவரது தைரியம், பலரையும் ஈர்த்துள்ளது.
வாரம் முழுக்க வீட்டில் நடந்த சம்பவங்களின், முக்கிய தருணங்களை விவாதித்து, தவறுகளைப் போட்டியாளர்களிடம் சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை. வீட்டில் நடந்த சம்பவங்களின் பின்னணிகளை அலசுவதுடன், அதற்கான தீர்வுகளையும் அசத்தலாகச் சொல்லும் அவரது திறமை பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளது.
வீட்டில் ஆண்களிடம் ஒற்றுமை நிலவினாலும், பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லாததைச் சுட்டிக்காட்டி, அதைச் சரி செய்து கொள்ளவும் பரிந்துரைத்தார். போட்டியாளர்களை அன்பாக அணுகுவதும், அவர்களது தவறுகளை கடுமையாகக் கண்டிப்பதும் என அதிரடியில் மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி.
வார முடிவில் எலிமினேஷன் ரவுண்டில், இந்த முறை ரவீந்தர் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தை மிகக் கவனமாகக் கையாண்ட விஜய் சேதுபதி, மீதமுள்ள போட்டியாளர்களை பற்றிய தனது நேர்மையான கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பம் முதலே பல புதுமைகளுடன், எதிர்பாராத திருப்பங்களுடன், கலக்கலாக நடந்து வரும், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியினை, உங்கள் விஜய் தொலைக்காட்சியில், 24/7 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com