த்ரிஷாவை பாராட்டிய மக்கள் செல்வன்

  • IndiaGlitz, [Sunday,June 03 2018]

கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, முதல்முறையாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் '96' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடித்த நாயகி த்ரிஷாவை பாராட்டி விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

த்ரிஷா சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவார் என்றும், தன்னுடைய கேரக்டரை உள்வாங்கி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும் விஜய்சேதுபதி பாராட்டியுள்ளார்.

விஜய்சேதுபதி இந்த படத்தில் வைல்ட்லைப் போட்டோகிராபர் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படம் 16, 36 மற்றும் 96 வயதில் உள்ள காதல் குறித்த கதையம்சம் கொண்டது என கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமார் இயக்கும் '96' படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் மேனன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவும், கோவிந்தராஜ் படத்தொகுப்பும் செய்கின்றனர். இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

மீண்டும் தளபதி விஜய்யின் 'போக்கிரி' ஆட்டம் ஆரம்பம்

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'போக்கிரி.

சின்னத்திரை இயக்குனரின் 'செயலி' ஆரம்பம்

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கி புகழ் பெற்றவர் இயக்குனர் ராஜ்குமார்.

வெளிநாட்டிலும் 'காலா' ரிலீசுக்கு சிக்கல்? அதிர்ச்சியில் படக்குழுவினர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்பட ரிலீஸ் தேதியின் கவுண்டிங் ஆரம்பமாகிவிட்ட நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'காலா'வை அடுத்து 'விஸ்வரூபம் 2' படத்திற்கும் தடையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

தமிழிசை குறித்து அவதூறு வீடியோ: திருச்சி இளம்பெண் அதிரடி கைது

திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் குறித்து அவதூறான வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.