வெற்றிமாறனின் 'விடுதலை' படம் குறித்த சூப்பர் அப்டேட்டை கொடுத்த விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Friday,January 27 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு கலந்த டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து டப்பிங்கின்போது எடுக்கப்பட்ட பூஜை புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

‘விடுதலை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி தனது பகுதிக்கான டப்பிங் பணியை தற்போது பேசி வருகிறார். இன்னும் ஒரிரு நாளில் இந்த டப்பிங் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதன் பின்னர் சூரி உட்பட இந்த படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களின் டப்பிங் பணி நடைபெறும் என்றும், இன்னும் ஒரு சில வாரங்களில் டப்பிங் பணி முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.