close
Choose your channels

தங்கமங்கை கோமதிக்கு விஜய்சேதுபதி செய்த உதவி!

Tuesday, April 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உதவிகளும் குவிந்து வருவது தெரிந்ததே. நடிகர் ரோபோசங்கர் ஒரு லட்சமும், திமுக பத்து லட்சமும் கொடுத்துள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை முடிந்தவுடன் தமிழக அரசும் தேவையான உதவிகளை கோமதிக்கு செய்யவுள்ளதாக கூறியுள்ளது

இந்த நிலையில் தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் காசோலையை தனது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார். அவர் தற்போது 'லாபம்' படப்பிடிப்பில் இருப்பதால் தன்னால் நேரில் வர இயலவில்லை என்று கூறி, கோமதிக்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.

விஜய்சேதுபதியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கோமதிக்கு காசோலை கொடுத்தது, அவர் விஜய்சேதுபதியிடம் மொபைல் போனில் பேசியது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment