குழந்தையின் மருத்துவ செலவு ரூ.16 கோடி: விஜய்சேதுபதி செய்த உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பாரதி என்ற குழந்தைக்கு SMA எனும் சொல்ல கூடிய முதுகுதண்டவட தசைநார் சிதைவு நோய்க்கான சிகிச்சையின் மருத்துவ செலவுக்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் ரூபாய் 20 இலட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். குழந்தையின் பெற்றோர் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கூறியதாவது: வணக்கம்! நாங்க பாரதி குழந்தையோட பெற்றோர். பாரதி குழந்தைக்கு SMA என்ற முதுகுதண்டவட தசைநார் சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோயை குணமாக்கும் ஊசியின் விலை ரூ. 16 கோடி. இதற்காக பல பேர்கள் பாப்பாவை குணப்படுத்த நிதி உதவி செய்து கொண்டு வருகின்றனர்.
மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் பாப்பாவின் விஷயத்தை கேள்விப்பட்டு 20 லட்ச ரூபாய் உதவி செய்துள்ளார். அவருக்கு எனது குடும்பத்தின் சார்பாகவும் பாரதி பாப்பா சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். இது மாதிரி எல்லாரும் பாப்பாவுக்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்’ என கூறியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout