'96' பட இயக்குனருக்கு '0096' கொடுத்த விஜய்சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவரும் ராம், ஜானு கேரக்டரில் நடிக்காமல், வாழ்ந்த படம் தான் '96'. இந்த படம் விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவருக்குமே தங்கள் வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும். அதேபோல் படம் பார்த்தவர்களுக்கும் 'ஆட்டோகிராப்' படத்தை அடுத்து தங்களது பள்ளிக்கால மலரும் நினைவுகளுக்கு அழைத்து சென்றதும் இந்த படம்தான்.
இந்த நிலையில் '96' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம்குமாருக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.3 லட்சம் மதிப்புள்ள புல்லட் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த புல்லட்டுக்கு 0096 என்ற பதிவெண்ணையும் வாங்கி கொடுத்துள்ளார். விஜய்சேதுபதிக்கு புல்லட் என்றால் மிகுந்த விருப்பம் என்பதால் அதனை அவர் இயக்குனர் பிரேம்குமாருக்கு வாங்கி கொடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இயக்குனர் பிரேம்குமார் தற்போது '96' திரைப்படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். தெலுங்கில் ராம், ஜானு கேரக்டரில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments