ஒரு பொண்ணுக்காக இல்லைன்னா இந்த உலகத்தில எதுக்கு வாழணும்.. விஜய்சேதுபதியின் 'மைக்கேல்' டிரைலர்

  • IndiaGlitz, [Monday,January 23 2023]

விஜய் சேதுபதி, கௌதம் மேனன், சந்தீப் கிஷான் நடிப்பில் உருவான ‘மைக்கேல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த ட்ரெய்லர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது

சந்தீப் கிஷான் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் கௌதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தீஷ், அய்யப்பன் ஷர்மா, அனுஷ்யா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அதிரடி ஆப்ஷன் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை உள்ளது என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக விஜய் சேதுபதி வழக்கம் போல் நெகட்டிவ் டைரக்டரில் அசத்தியுள்ளார் என்பதும், வரலட்சுமி அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைலரின் ஆரம்பத்தில் ’பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்றுவிடும், அவ்வளவு விஷம் பெண்ணுக்கு’ என்று தொடங்கி, ஆமாம் ஒரு பொண்ணுக்காகத்தான் இதையெல்லாம் செய்றேன், பொண்ணுக்காக இல்லைன்னா இந்த உலகத்துல எதுக்கு சார் ஒருத்தன் வாழணும்’ என்று முடிவடைவதால் இந்த படத்தின் கதை ஒரு பெண்ணை மையப்படுத்தியுள்ளது என்பது தெரிய வருகிறது.