விஜய் பஞ்ச் டயலாக்கை நடைமுறையில் செய்து காட்டிய விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Saturday,June 10 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தில் இடம்பெற்ற ஒரு பஞ்ச் டயலாக் 'இன்னைக்கு நிறைய பேர் கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் என் கிட்ட இருக்கு, சொன்ன சொல்ல காப்பாத்துறது..' என்பது அனைரும் தெரிந்ததே. இந்த பஞ்ச் டயலாக்கை தனது நிஜ வாழ்வில் செய்து காட்டியுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி

வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதியிடம் அந்த படத்தின் இணை இயக்குனர் லெனின் ஒரு கதையை சொன்னாராம். அந்த கதையை கேட்டு அசந்து போன விஜய்சேதுபதி சினிமாவில் நான் பெரிய ஆளானால் கண்டிப்பாக இந்த படத்தை நானே தயாரிக்கின்றேன்' என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

சினிமாவுலகை பொருத்தவரையில் வாக்குறுதி என்பது தண்ணீரில் எழுதிய எழுத்து என்பதுதான் நடைமுறை. ஆனால் விஜய்சேதுபதி பல வருடங்களுக்கு முன் லெனினுக்கு கொடுத்த வாக்குறுதியை தற்போது காப்பாற்றியுள்ளார். அந்த படம் தான் விஜய் சேதுபதி புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேற்கு தொடர்ச்சி மலை'. அதுமட்டுமின்றி 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் தன்னுடன் சிறு கேரக்டரில் நடித்த ஆண்டனி தான் ஹீரோ என்று இயக்குனர் லெனின் கூறியபோது அதை மறுக்காமல் ஏற்று கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆண்டனிக்கு ஜோடியாக காயத்ரி கிருஷ்ணா நடித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

More News

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் கோடை வெயில் கடந்த சில மாதங்களாக கொளுத்தி வந்த நிலையில் சமீபத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

முதல்வர் சந்திப்பு எதிரொலி: அய்யாக்கண்ணுவின் சென்னை போராட்டம் வாபஸ்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் 41 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடைபெற்ற நிலையில் நேற்று முதல் சென்னையிலும் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடங்கியது.

பிலிம்பேர் விருது : 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட கபாலி-தெறி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' ஆகிய இரண்டு படங்களும் பிலிம்பேர் சவுத் விருதுகளுக்கு 8 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது

கார்த்தியின் அடுத்தடுத்த 3 படங்களின் திட்டங்கள்

பிரபல நடிகர் கார்த்தி தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடித்து வருகிறார்.

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாகும் ஜெய் நாயகி

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நாயகன் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஜி.வி.பிரகாஷ், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன '100% லவ்' என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமகியுள்ளார் என்பதை சமீபத்தில் பார்த்தோம்.