விஜய் சேதுபதியின் முதல் ரூ.100 கோடி வசூல் படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ’மகாராஜா’ திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தது என்பதும், இந்த படம் ஓப்பனிங் வசூலிலும் தொடர்ந்து சாதனை செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேஷன் ஸ்டுடியோஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ’மகாராஜா’ திரைப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் என்ற பெருமை மட்டுமின்றி அவரது முதல் 100 கோடி ரூபாய் வசூல் படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விஜய் சேதுபதி உட்பட படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், அபிராமி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Majestic glory for #Maharaja with 100+ crores worldwide at the box office🔥#BlockbusterMaharaja#MakkalSelvan @VijaySethuOffl
— Passion Studios (@PassionStudios_) July 3, 2024
Written and Directed by @Dir_Nithilan@anuragkashyap72 @mamtamohan @Natty_Nataraj @Abhiramiact@AjaneeshB @Philoedit @DKP_DOP @Selva_ArtDir… pic.twitter.com/HpHDU2Kza5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com