விஜய்சேதுபதியின் முதல் பாலிவுட் பட டைட்டில் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படம் ’மாநகரம்’ என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் என்பதும் தெரிந்ததே.
’மாநகரம்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒருவர் விக்ராந்த் மாஸ்ஸே என்றும் இன்னொருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்றும் வெளியான செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டிலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ’மும்பைகார்; என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் முதல் பாலிவுட் திரைப்படத்தின் டைட்டில் வெளியானது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றதற்கு தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விக்ராந்த் மாஸ்ஸே, விஜய்சேதுபதி, தான்ய மாணிக்தலா, ஹிர்து ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே, சச்சின் கேடேகர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்கின்றார். விஜய்யின் ‘புலி’ உள்பட ஒருசில திரைப்படங்களை இயக்கிய ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.
Here's the title look of #Mumbaikar! Happy to be a part of it ????@santoshsivan @shibuthameens @masseysahib #TanyaManiktala @imsanjaimishra@RanvirShorey @SachinSKhedekar@iprashantpillai @hridhuharoon#RiyaShibu @proyuvraaj pic.twitter.com/zythMcokIb
— VijaySethupathi (@VijaySethuOffl) January 1, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments