முரளிதரனின் '800' திரைப்படம்: விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பும் ஆதரவும்!

  • IndiaGlitz, [Wednesday,October 14 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘800’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று ஈழத் தமிழர்கள் உள்பட ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் ஆனால் அதையும் மீறி விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிராக நேற்று மாலை முதல் ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் அதில் விஜய் சேதுபதி குறித்து தரக்குறைவான கருத்துக்களை ஒரு சிலர் பதிவு செய்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆனால் அதே நேரத்தில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய்சேதுபதி ரசிகர்களும் #WeStandWithVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதையும் டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் முரளிதரனின் கிரிக்கெட் வாழக்கை மட்டுமே இந்த படத்தில் இருக்கும் என்று விஜய்சேதுபதி உறுதியளித்ததாகவும், ஆனால் நேற்று வெளியான மோஷன் போஸ்டரில் இலங்கையில் நடந்த போர் குறித்த காட்சிகள் இருப்பதாகவும் ஈழத்தமிழர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் தமிழர் ஒருவரின் கிரிக்கெட் அணிக்கு முத்தையா முரளிதரன் பயிற்சியாளராக இருக்கின்றார் என்றும், ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழர்கள் இதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவதால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

சிம்பு-த்ரிஷா திருமணமா? பதில் சொல்ல மறுத்த டி.ராஜேந்தர்!

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் அவருக்கு பொருத்தமான மணப்பெண்ணை அவரது பெற்றோர்கள் பார்த்து வருகின்றனர் என்றும்

முதல்வரை சந்திக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்: திரையரங்குகள் திறப்பது எப்போது?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும்

பிக்பாஸ் அதிரடி அறிவிப்பு: திடீரென கூட்டாளிகளை தேர்வு செய்யும் போட்டியாளர்கள்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே 'எவிக்சன் பாஸ்' என்ற ஒரு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு அது நேற்று ஆஜித்துக்கு கிடைத்தது என்பதை பார்த்தோம்.

பழனி முருகனுக்கு காவடி தூக்கி காயத்ரி ரகுராம்: வெயிட்டான வேண்டுதலா?

கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இருக்கும் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அக்கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளர் பதவி மட்டுமே கிடைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டே தனுஷூக்கு நன்றி சொன்ன ஷிவானி: வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னால் நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் விதவிதமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் என்பது தெரிந்ததே