இந்து மகா சபா புகார் எதிரொலி: விஜய்சேதுபதி தரப்பின் பதிலடி

  • IndiaGlitz, [Sunday,May 10 2020]

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விஜய்சேதுபதி காமெடியாக பேசியதை ஒருசிலர் சர்ச்சையாக்கியுள்ளனர் என்பதும், இதுகுறித்து இந்து மகா சபா என்ற அமைப்பு காவல்துறையில் புகார் அளித்துள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஜய்சேதுபதியின் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பாக தலைமை செயலாளர் குமரன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் விஜய்சேதுபதி கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சியில் ’நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் கிரேஸி மோகன் மேடையில் பேசிய நகைச்சுவை வசனத்தை இங்கு பேசினார். இந்த நகைச்சுவை வசனத்தை முற்றிலுமாக மாற்றி இந்துக்களுக்கு எதிராக பேசியது போல் காணொளியை எடிட் செய்து சமூக வலைதளத்தில் விஷமிகள் சிலர் பரப்பி உள்ளனர்.

இதனால் சமூக வலைதளங்களில் இந்து ஆதரவாளர்கள் சிலர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகின்றனர். மேலும் இதன் மூலம் விஜய் சேதுபதியின் நற்பெயரை கெடுக்கும் விதத்திலும்,சமுதாய அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளதாக கூறியுள்ளார். எனவே உடனடியாக விஜய் சேதுபதி பற்றி பேசிய கருத்துகளை அகற்றவும்,விஷமிகள் சிலர் பரப்பிய அந்த வீடியோவை நீக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். விஜய்சேதுபதி தரப்பின் இந்த பதில் புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

சென்னையில் ஒருநாள் குழந்தை உள்பட 7 குழந்தைகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

சென்னையில் ஒரே நாளில் இன்று 7 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி, பச்சிளங்குழந்தைகளையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது

அன்னையர் தினத்தில் முதல்முறையாக 'அம்மா' என கூப்பிட்ட குழந்தை: பிக்பாஸ் நடிகர் நெகிழ்ச்சி

ராதாமோகனின் 'அபியும் நானும்' கமல்ஹாசனின் 'உன்னைப்போல் ஒருவன்' போன்ற படங்களில் நடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட

ஒரு பெண் மருத்துவர் உள்பட 5 மருத்துவர்களுக்கு கொரோனா: சென்னையில் பரபரப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

லாட்டரி, சூதாட்டம், கஞ்சா, பலான இடம், எல்லாத்தையும் திறந்துடுங்க: கஸ்தூரி ஆவேசம்

நடிகை கஸ்தூரி அவ்வப்போது தனது சமூக கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் ஆவேசமாக தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவர் டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறித்து

ராகவா லாரன்ஸ் கோரிக்கையை ஏற்று கொண்ட விஜய்: லாக்டவுன் முடிந்ததும் சந்திக்க விருப்பம்

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் அவர்கள் மாற்றுத்திறனாளி சிறுவர் ஒருவர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் பாடலை மிக அருமையாக பாடியதாக செய்தி வெளியிட்டு இருந்தார்.