'லியோ'வில் நான் நடிக்கிறேனா? ரத்னகுமார் ஹிண்ட்-க்கு விஜய் சேதுபதி பதில்..!

  • IndiaGlitz, [Thursday,May 11 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான ரத்னகுமார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக பதிவு செய்து இருந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்

‘லியோ’ படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவரான ரத்னகுமார் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கையில் உடைந்த கூலிங் கிளாஸின் ஒரு பகுதியை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்தார். அந்த கண்ணாடி ’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கேரக்டரின் கண்ணாடி என்பதால் நெட்டிசன்கள் ‘லியோ’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை தான் ரத்னகுமார் மறைமுகமாக கூறியதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில் இது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ‘லியோ’ படத்தில் நான் நடிக்கவில்லை, தயவு செய்து இது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். ரத்னகுமார் எதற்காக அந்த கண்ணாடியை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார் என்று எனக்கு தெரியாது. ‘லியோ’ படத்தில் நான் நடிப்பதாக பல ரசிகர்களின் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர், ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது, அதனால் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.