எனக்கு எந்த லட்சியமும் கிடையாது: விஜய்சேதுபதியின் பிரத்யேக பேட்டி

  • IndiaGlitz, [Monday,July 12 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்து இந்திய மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார் என்பதும். அந்த பிசியிலும் அவர் ’மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியை சன் டிவிக்காக தொகுத்து வழங்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் இடையே நமக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் கூறியபோது ’எனக்கு இலட்சியம் என்ற ஒன்றே கிடையாது என்றும் நான் என் மனம் போகிற போக்கில் போய்க் கொண்டே இருப்பேன் என்றும் நான் செல்லும் பாதையில் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஒரே இடத்தில் இருந்து கொண்டு அறிவை அப்டேட் செய்யாமல் இருப்பது எனக்கு ஒத்துவராது என்றும் எந்த இடத்தில் என்ன நல்லது கிடைத்தாலும் அதை நான் கற்றுக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் நம்மையே நாம் அப்டேட் பண்ணிக் கொண்டால் நாம் யாராக இருக்கிறோம் என்று நமக்கு தெரியும் என்றும் நேற்று நாம் எப்படி இருந்தோம் என்றும், அதற்காக கற்றுக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் கூறினார். விஜய்சேதுபதி அளித்த இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ: