ஆசிபா கொடுமை குறித்து விஜய்சேதுபதி கூறியது என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபாவுக்கு நடந்த கொடுமையால் இந்தியாவே அதிர்ச்சியில் உள்ளது அதைவிட இந்த கொடூர குற்றவாளிகளுக்கு ஒருசிலர் ஆதரவாக பேசி வருவது அதிர்ச்சியாகவும் அசிங்கமாகவும் உள்ளது. இந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து விஜய்சேதுபதி கூறியதாவது:
ஆசிபாவுக்கு நடந்த கொடூரத்தை நினைத்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது. அதைவிட குற்றாவாளிக்கு சப்போர்ட் செய்வதை நினைக்கும் போது கோபம் வருகிறது. அதையும் படித்தவர்கள் செய்வது மிகவும் கொடுமையான ஒன்று. பெண்களை மதிக்க கற்று கொடுத்து வருவது போல், பெண் குழந்தைகளையும் மதிக்க கற்று கொடுக்க வேண்டும் போல் தெரிகிறது.
நம் எல்லோர் வீட்டிலும் அம்மாவாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், நண்பர்களாகவும் பெண்கள் இருக்கின்றார்கள். இதற்கு மேல் பெண்களை மதிக்க எப்படி பாடம் எடுப்பது என்று தெரியவில்லை
நமக்கு தேவையான அடிப்படை தேவைகள் எதையும் நமக்கு செய்து தர மாட்டார்கள். ஆனால் நாம் என்ன ஜாதி, என்ன மதம் போன்ற பாடங்களை மட்டும் எடுத்து கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
இதுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அது பத்தாது. ஆனாலும் தண்டனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இதை சப்போர்ட் செய்வது ரொம்ப அசிங்கமானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments