அனிதா பிறந்த மாவட்டத்திற்கு விஜய்சேதுபதி கொடுத்த ரூ.50 லட்சம் நன்கொடை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய்சேதுபதி தனியார் சேமியா நிறுவனம் ஒன்றின் லோகோவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு சமூக பணிகளுக்கு ரூ.50 லட்சம் நன்கொடை தருவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருப்பதால் இந்த பகுதியில் இருக்கும் 771 அங்கன்வாடிகளுக்கு தலா ரூ.5000 மற்றும் 10 அரசு பார்வையற்ற பள்ளிகளுக்கு தலா ரூ.50,000 மற்றும் 11 அரசு செவித்திறன் குறைந்தவர்களுக்கான பள்ளிக்கு தலா ரூ.50,000 என மொத்தம் ரூ.50 லட்சம் நன்கொடையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்.
இந்த அறிவிப்பு நான் செய்யும் நன்கொடையை விளம்பரப்படுத்த அல்ல. நான் கொடுப்பது ஒரு சொற்ப தொகை தான். இதை கேள்விப்பட்டு, இதன் மூலம் வேறு சிலரும் நன்கொடை கொடுக்க வாய்ப்பு இருப்பதால் இந்த அறிவிப்பை இந்த நிகழ்ச்சியில் வெளியிடுகிறேன்.
அரியலூர் பின்தங்கிய மாவட்டமாக இருப்பதால் மட்டும் அதை தேர்வு செய்யவில்லை, சகோதரி அனிதா மறைந்த இந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் இந்த மாவட்டத்தை தேர்வு செய்தேன்' என்றும் விஜய்சேதுபதி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments