கமல் 10, சிவாஜி 9, விஜய்சேதுபதி 8: இது என்ன கணக்கு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் 'தசாவதாரம்' என்ற படத்தின் மூலம் 10 கேரக்டர்களில் நடித்த ஒரே நடிகர் என்ற புகழ் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்னும் உள்ளது. அதேபோல் 'நவராத்திரி' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 9 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் கமல், சிவாஜியை அடுத்து தற்போது விஜய்சேதுபதி 8 வித்தியாசமான கேரக்டர்களில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆம், இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கி வரும் ;ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' என்ற படத்தில் விஜய்சேதுபதி பழங்குடி இனத்தவர் உள்பட எட்டு வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் இயக்குனர் ஆறுமுககுமார் இதுகுறித்து கூறியபோது, படத்தின் கதை விஜய்சேதுபதியின் பழங்குடி இன கேரக்டரை மையாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் நகரத்தில் இருந்து காட்டிற்கு மாறுகிறது. மேலும் பழங்குடி இனத்தவர்களின் தனித்துவமான சடங்குகள் இந்த படத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் கதைப்படி விஜய்சேதுபதி விதவிதமான தோற்றங்களில் தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்களுக்காக அவருக்கு மூன்று ஹேர்ஸ்டைல் கலைஞர்களும், மேக்கப் கலைஞர்களும் நியமனம் செய்யப்பட்டிருபதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.
விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக், நிஹாரிகா கொனிடெலா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments