சக நடிகருக்காக விஜய்சேதுபதி முதன்முதலில் செய்த விஷயம்

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது ரசிகர்களிடமே முத்தம் கொடுத்து நெருக்கமாக இருக்கும் நிலையில் சக நடிகர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருப்பார் என்பதை சொல்லவே தேவையில்லை. இந்த நிலையில் பல படங்களில் நடித்த சக நடிகரான தனக்காக முதன்முதலில் விஜய்சேதுபதி செய்த விஷயம் குறித்து நடிகர் ரமேஷ் திலக் ஆச்சரியத்துடன் கூறியது இதுதான்:

ரமேஷ் திலக்கின் திருமண தினத்தில் விஜய்சேதுபதி ஊரில் இல்லாததால் அவரால் திருமணத்திற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாம். இதை முன்கூட்டியே தெரிவித்துவிட்ட விஜய்சேதுபதி, திருமணம் முடிந்த பின்னர் ஒருநாள் கண்டிப்பாக வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்திருந்தாராம்

ஆனால் திருமண தினத்தன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியின்போது விஜய்சேதுபதி வருகை தந்துள்ளார். அவர் மட்டுமின்றி அவரது மனைவி, குழந்தைகள், அம்மா, தங்கை என ஒட்டுமொத்த குடும்பமும் வந்திருந்தனர். விஜய்சேதுபதி தனது மொத்த குடும்பத்தினர்களுடனும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றது தனது வரவேற்பு நிகழ்ச்சி மட்டுமே என்பதில் தான் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக ரமேஷ் திலக் கூறியுள்ளார்.

More News

பாதியில் உள்ள ஸ்ரீதேவி படத்தில் நடிக்கும் பிரபல நடிகை

ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது நடித்த ஒரு படம் முழுமை பெறாமல் பாதியில் உள்ளது.

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா? தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?

இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெயில் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும்

திருச்சி உஷாவின் மரணத்திற்கு காரணம் இதுதான்: நீதிபதியின் விளக்கம்

சமீபத்தில் திருச்சியில் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா-உஷா தம்பதியினரை விரட்டி சென்ற காவலர் ஒருவரின் மனிதநேயமற்ற செயலால், உஷாவின் உயிர் பரிதாபமாக பலியானது.

தில்லையில் தினேஷ் கார்த்திக் கட்-அவுட்! ரசிகர் மன்றம் எப்போது?

இதுவரை தமிழக இளைஞர்கள் கோலிவுட்டின் பெரிய ஸ்டார்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டும்தான் கட்-அவுட் வைத்து நாம் பார்த்துள்ளோம்

விஜய்யின் எளிமைக்கு எடுத்துக்காட்டு கூறிய ராதாரவி

விஜய் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவர் ஒரு எளிமையான மனிதர். உடன் நடிக்கும் நடிகர்களை ஊக்குவிப்பதை அவர் தவறுவதில்லை.