விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,August 05 2016]

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து இம்மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இன்று இந்த படம் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் எவ்வித 'கட்'டும் செய்யாமல் படத்திற்கு 'U' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கை பெறும் வாய்ப்பு பெற்றுள்ளது.
இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று அல்லது நாளை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஆகஸ்ட் 12 அல்லது 19-ல் இந்த படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.
விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சீனுராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தை பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

More News

'ரெமோ' பிசினஸ் ஆரம்பம். முதல்போனி கோவையில்!!!

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட்...

சீயான் விக்ரமின் மிகப்பெரிய பிசினஸ் இதுதான்

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அனைத்து எப்.எம் வானொலிகளில்...

'பாகுபலி 2' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்...

மலேசியாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 'கபாலி'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தின் வசூல் குறித்து...

முதல்முறையாக இணையும் சிம்பு-பிரபுதேவா

கோலிவுட்டின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிம்புவும், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற புகழுடன் நடிப்பு...