close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' டிராக் லிஸ்ட்

Thursday, July 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது இந்த படத்தின் டிராக்-லிஸ்ட் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.,
1. 'எந்த பக்கம்' என்று தொடங்கும் முதல் பாடலை சின்மயி மற்றும் ராகுல் நந்தா பாடியுள்ளனர்.
2. ஆண்டிப்பட்டி' என்று தொடங்கும் 2வது பாடலை செந்தில்தாஸ் மற்றும் சுர்முகி ஆகியோர் பாடியுள்ளனர்.
3. போய் வாடா' என்று தொடங்கும் 3வது பாடலை ஸ்ரீமதுமிதா பாடியுள்ளார்.
4. மக்கா..கலங்குதப்பா..என்று தொடங்கும் 4வது பாடலை மதிச்சியம் பாலா எழுதி பாடியுள்ளார்.
5. 'நான் காற்றிலே' என்று தொடங்கும் கடைசி பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.
விஜய்சேதுபதி, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment