'தர்மதுரை' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 19 2016]

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கி வந்த 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு தினம் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ஜூலை 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. பாடல் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் தற்போது இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார். சீனுராமசாமி இயக்கிய இந்த படத்தில் தமன்னா முதல்முறையாக மதுரை பெண்ணாக நடித்துள்ளதுடன் சொந்தக்குரலில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிவாஜி கணேசன் - மோகன்லால் படத்தின் ரிலீஸ் தேதி

கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மலையாள திரைப்படம் 'ஒரு யாத்ரா மொழி. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சிவாஜி கணேசன்...

'கபாலி'க்காக விடுமுறை அறிவித்த முன்னணி இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோலிவுட் திரையுலகில் பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரையிலும், டெக்னீஷியன் லெவலில் இயக்குனர்கள்...

தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதியை இணைத்த கே.எஸ்.ரவிகுமார்

கோலிவுட் திரையுலகின் சீனியர் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார் தற்போது 'முடிஞ்சா இவனப் புடி' என்ற படத்தை இயக்கியுள்ளார்..

'கபாலி'யுடன் இணைந்த 'தனி ஒருவன்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ஜூரம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு பரவியுள்ள நிலையில்...

கபாலி: ஹவாய் தீவில் ரிலீஸ் ஆகும் முதல் தென்னிந்திய படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் ஒவ்வொரு திரையரங்காக செய்யப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு திரையரங்கிலும் முன்பதிவு ஆரம்பித்த ஒருசில நிமிடங்களில் முதல் மூன்று நாட்களுக்குரிய காட்சிகளின் டிக்கெட்டுக்கள் விற்பனை முடிந்து வருகிறது...