விஜய்சேதுபதி படத்தின் ரீமேக்கில் அமீர்கான்

  • IndiaGlitz, [Friday,March 11 2016]

விஜய்சேதுபதி, மடோனே செபாஸ்டியன் நடிப்பில் உருவான 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அவருடைய அடுத்த படமான 'தர்மதுரை' படத்தின் இசைவெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாக சமூக இணையதளங்களில் போஸ்டருடன் கூடிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.


விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ஷிவேதா, ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழில் இந்த படம் வெற்றி பெற்றால் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இந்தி ரீமேக்கில் அமீர்கானை நடிக்க வைக்க முயற்சி செய்யப்படும் என்று தயாரிப்பில் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

More News

கின்னஸ் சாதனை செய்த ஏ.ஆர்.முருகதாஸ் நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' நாயகிகளில் ஒருவரும் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'அகிரா' படத்தின் நாயகியுமான சோனாக்ஷி சின்ஹா...

ஜெயம் ரவியுடன் இணையும் விஜய்-அஜித் பட நடிகை

சமீபத்தில் வெளியான 'மிருதன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனுடன் மீண்டும் ஜெயம் ரவி இணையவுள்ளார்...

'இது நம்ம ஆளு' படத்தின் மூன்றாவது நாயகி யார் தெரியுமா?

சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா உள்பட மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு' திரைப்படத்தில் இன்னும...

'தனி ஒருவனுடன் இணைந்தார் சிவகார்த்திகேயன்

'ரஜினிமுருகன்' வெற்றிப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வருகிறார்...

30-ஐ 14-ல் முடித்த சிம்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய...