விஜய் பாடலுக்கு நடனமாடிய விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Saturday,November 20 2021]

தளபதி விஜயின் பாடலுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் உலக அளவில் பிரபலம் ஆனது என்பதும் இந்த பாடலின் வரிகள் புரியாதவர்கள் கூட இந்த பாடலின் இசைக்கு நடனம் ஆடிய வீடியோக்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமின்றி பல திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோக்களும் வைரலானது. இந்த நிலையில் ’வாத்தி கம்மிங்’ என்ற இந்த பாடலுக்கு விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் நடனம் ஆடிய காட்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.