'தளபதி 64' படத்தில் விஜய்சேதுபதி: எப்படி சாத்தியம் ஆனது?

  • IndiaGlitz, [Friday,September 27 2019]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ள நிலையில் அவர் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இதனை அடுத்து அவருடைய அடுத்த படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’தளபதி 64’ திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இருப்பினும் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருவதால் இது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்தது

இந்த நிலையில் ’தளபதி 64’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிலித்குமார் தான் விஜய்சேதுபதி நடித்து வரும் ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் என்பதால் இப்படத்திற்காக விஜய் சேதுபதி கொடுத்த தேதிகளை ’தளபதி 64’ படத்திற்காக மாற்றி அமை கூறிய ஆலோசனையை விஜய் சேதுபதியும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது

இதனை அடுத்து ’தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது