'தளபதி 64' படத்தில் விஜய்சேதுபதி: எப்படி சாத்தியம் ஆனது?

  • IndiaGlitz, [Friday,September 27 2019]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ள நிலையில் அவர் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். இதனை அடுத்து அவருடைய அடுத்த படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’தளபதி 64’ திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இருப்பினும் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருவதால் இது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்தது

இந்த நிலையில் ’தளபதி 64’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிலித்குமார் தான் விஜய்சேதுபதி நடித்து வரும் ’துக்ளக் தர்பார்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் என்பதால் இப்படத்திற்காக விஜய் சேதுபதி கொடுத்த தேதிகளை ’தளபதி 64’ படத்திற்காக மாற்றி அமை கூறிய ஆலோசனையை விஜய் சேதுபதியும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது

இதனை அடுத்து ’தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இந்தி மொழி குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிய கருத்து!

இந்தியா முழுவதும் பரவலாக பரவியிருக்கும் இந்தி மொழி, தமிழகத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக நுழைய முடியாத வகையில் உள்ளது. அதற்கு திராவிட கட்சிகளின் தீவிர எதிர்ப்பு முக்கிய காரணம்

உண்மையான பக்திமான் யார்? நடிக சிவகுமார் விளக்கம்

உண்மையான பக்திமான் யார்? என்பது குறித்து நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

விஜய் கூறிய குட்டிக்கதைக்கு விளக்கம் கூறிய பட்டிமன்ற பேச்சாளர்

சமீபத்தில் நடைபெற்ற 'பிகில்' படத்தின் ஆடியோ விழாவில் விஜய் ஒரு குட்டிக் கதையை கூறினார். யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைத்தால் தான் சரியாக இருக்கும்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த புதிய விருந்தாளி

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் பத்து நாள்களில் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடந்த சீசனில் பங்கேற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து கொண்டிருக்கின்றனர் 

6 மாதத்தில் கட்சி, 2021ல் முதல்வர்: ரஜினி குறித்து பிரபல அரசியல்வாதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்து அதன்பின் அதற்கான பணிகளை செய்து வந்தார். கட்சி ஆரம்பிக்கும் பணிகள் 90% முடிந்துவிட்டதாகவும்,