கமல் அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை கொண்டு செல்வாரா விஜய் சேதுபதி? நெட்டிசன்கள் கருத்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வீடியோ ஒன்றுடன் வெளியானது. இந்த புரமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் கமல்ஹாசன் அளவுக்கு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக விஜய் சேதுபதி கொண்டு செல்வாரா என்ற கருத்துக்கள் நெட்டிசன்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் 50 ஆண்டு கால திரையுலக அனுபவம் உள்ளவர் என்பதும் அது மட்டும் இன்றி ஏராளமான புத்தகங்களை படித்தவர் என்பதாலும் அவர் எந்த ஒரு டாபிக்கை எடுத்தாலும் அதில் ஒரு ஐந்து நிமிடம் பேசக்கூடிய அளவுக்கு திறமையானவர்.
மேலும் போட்டியாளர்களிடம் பாசத்தை காட்டுவது மட்டுமின்றி கண்டிப்பையும் காட்டுவார் என்பதும் தவறு செய்யும் போட்டியாளர்கள் யாராக இருந்தாலும் தைரியமாக அவர் தட்டிக் கேட்பார் என்பதும் தான் அவரது பலமாக இருந்தது.
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் திரையுலக அனுபவம் மற்றும் வாழ்க்கை அனுபவம் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு செல்ல முடியுமா என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பினாலும் விஜய் சேதுபதியின் பேட்டியை மற்றும் அவர் திரைப்பட விழாவில் பேசிய பேச்சை பார்த்தாலே, கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல அனுபவம் உள்ளவர் தான் என்று நெட்டிசன் தெரிவித்து வருகின்றனர்.
எனவே கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் வித்தியாசமாக கொண்டு செல்வார் என்றும் அவரது தொகுப்பில் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Vandhaachu Pudhu Bigg Boss 😉 #VJStheBBhost @VijaySethuOffl 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision @disneyplusHSTam #VijayTV pic.twitter.com/VZxKnYUYI2
— Vijay Television (@vijaytelevision) September 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com