அது ரஜினியோட கருத்து, இது என்னோட கருத்து: காஷ்மீர் பிரச்சனை குறித்து விஜய்சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
காஷ்மீர் பிரச்சனை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கருத்தையும், இந்த கருத்துக்கு முற்றிலும் எதிராக விஜய்சேதுபதி ஒரு கருத்தையும் ஒரே நாளில் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுகுறித்து விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்த எனது கருத்து அரசுக்கு எதிர்க்கருத்து இல்லை, நான் சொன்னது என்னுடைய கருத்து. ரஜினி சார் சொன்னது அவருடைய கருத்து. நான் பெரிய அறிவாளியெல்லாம் இல்லை. இது ஜனநாயக முறைப்படி நடந்திருக்கலாம்னுதான் சொல்றேன். இதைத் தாண்டி எனக்கு அரசியல் அறிவு இருக்கான்னு கேட்டீங்கன்னா அது பூஜ்ஜியம். நான் எல்லாமே தெரிஞ்சவன்னு பொய்யான பிம்பத்தை உருவாக்கிக்க விரும்பலை. அப்புறம் ‘ஏன்டா கருத்து சொல்ற’ன்னு கேட்டா ஒரு சாமானியனுக்குக் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஒரு சாமானியனா ஒரு கருத்தை நான் முன்வைக்கும்போது என்மேல ஏன் வெறுப்பை உமிழறாங்கன்னு தெரியலை. என்று கூறினார்.
மேலும் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்களைப் பிரிக்க நினைத்தாலும் அவர்களை ஒன்று சேர்க்க தன்னால் ஆன முயற்சியை எடுத்து வருவதாகவும், சாதி, மதத்தைக் கடந்து மனிதம் பேசணும் என்பதுதான் தன்னுடைய ரசிகர்களுக்கும் மன்றத்துக்கும் தான் சொல்லும் முக்கிய விஷயம் என்றும் அதே பேட்டியில் விஜய்சேதுபதி கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments