விஜய்சேதுபதி மீதான அவதூறு வழக்கில் முக்கிய உத்தரவு!
- IndiaGlitz, [Friday,January 07 2022]
விஜய்சேதுபதி மீது பதிவு செய்யபப்ட்ட அவதூறு வழக்கில் முக்கிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்தபோது அவரை நடிகர் மகா காந்தி என்பவர் பார்க்க வந்ததாகவும் ஆனால் தன்னை பார்க்க மறுத்ததோடு தன்னை இழிவாக பேசி தனது சாதியையும் தவறாக பேசியதாகவும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாகாந்தி அவதூறு வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் தன்னை ஆஜராக வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் விளம்பரத்திற்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு இன்று நடைபெற்ற போது விளம்பர நோக்கத்துடன் 3 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அந்த வழக்கை தள்ளுபடி செய்வதோடு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் விஜய்சேதுபதி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் மகாகாந்தி தரப்பினரோ விளம்பரத்துக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் தனது கட்சிக்காரரை திட்டி தாக்கியதால் தான் வாக்கு தொடர்ந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 11-ம் தேதி நடைபெறும் என நீதிபதி வழக்கை தள்ளி வைத்தார்.