கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,May 09 2016]

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம்பெற்ற 'இறைவி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகிய நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் இன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கவுள்ள நிலையில் இந்த படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இருப்பினும் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் விஜய்சேதுபதியின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக இந்த படம் வெற்றி பட வரிசையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்சேதுபதி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, கமாலினி முகர்ஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

More News

தேர்தல் பிரச்சார பணியில் திடீரென இறங்கும் சிம்பு

சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் 20ஆம் தேதி என்று கூறப்படும் நிலையில் அதற்கு முன்னதாக சிம்புவின் தனிப்பாடல் ஒன்று ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது...

இன்று மாலை 'ரெமோ' குறித்த முக்கிய அறிவிப்பு?

சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் ஆனதால் அடுத்து அவர் நடித்து வரும் நகைச்சுவை திரைப்படமான 'ரெமோ' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.....

விஜய்சேதுபதியின் வில்லனாகிறார் 'வேதாளம்' வில்லன்.

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேதாளம்' படத்தில் வில்லனாக நடித்த கபீர்சிங் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'றெக்க' படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளாராம்....

கருவில் சுமந்த தாய்க்கு கருவறையில் சிலை. ராகவா லாரன்ஸ்

பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் தீவிர ராகவேந்திரர் பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சென்னை அருகே ஸ்ரீராகவேந்தரருக்கு கோயில் கட்டியுள்ளார்...

தப்பிப் பிழைத்தது பாபிசிம்ஹா படம்

ஜிகர்தண்டா' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பாபிசிம்ஹா தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவாகி வருகிறார்...