மக்களின் செல்வன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Thursday,January 16 2020]

சினிமாவில் இன்று பிரபலமாகி இருக்கும் பலர் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது தெரிந்ததே. ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதும் அவர்களுடைய விடா முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் திறமை ஆகியவைகளால் இன்று அவர்கள் உச்சத்தில் இருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரஜினி, அஜித் போன்றவர்களின் போன்றவர்கள் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியும் உள்ளார்.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்த விஜய் சேதுபதி, தனது பதினோராவது வயதில் குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். சென்னையில் பள்ளி, கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் கிடைத்த வேலைகளை செய்து குறைந்த வருமானத்தை மட்டுமே பெற்று வந்தார். துபாயிலும் சில மாதங்கள் அவர் பணிபுரிந்த தாகவும் அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார்

இந்த நிலையில் அவரது குடும்ப பின்னணி மற்றும் பொருளாதார தேவை ஆகியவை அவரை கலையுலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனாலும் அவருக்கு கலையுலகில் உடனடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவில் சின்னச் சின்ன வேலைகளை செய்து கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்பு பயிற்சி பெற்று அதன் பின் பலவித போராட்டங்களுக்கு பிறகு அவருக்கு சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தது. தனுஷின் புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன காட்சிகளில் தலை காட்டிய விஜய் சேதுபதி ’பீட்சா’ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற படங்களின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். அதன்பின் அவருக்கு கை கொடுத்த படங்கள் ’சூது கவ்வும்’ ’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களை சொல்லலாம்.

அதன்பின் விஜய் சேதுபதி எடுத்து வைக்கும் அடிகள் எல்லாமே வெற்றிப் படிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பதற்கு நடிகர்கள் திணறி வரும் நிலையில் சர்வசாதாரணமாக வருடத்திற்கு ஏழு படங்களுக்கு மேல் நடித்து வரும் ஒரு நடிகர் உண்டென்றால் அவர் விஜய் சேதுபதி மட்டுமே என்று கூறலாம்.

எந்த ஒரு கேரக்டருக்கும் அவரது முகம் பொருத்தமாக இருப்பது தான் அவரது பெரிய பெரிய பிளஸ். பக்கத்து வீட்டு பையன் போலிருக்கும் ’இதற்குத்தானா பாலகுமாரா’ போன்ற படங்களும், கம்பீரமான போலீஸ் கெரக்டருக்கு சேதுபதி போன்ற படங்களிலும், உள்ளத்தை உருக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு 96 போன்ற படங்களும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வயதான பாத்திரத்திலும் அவர் நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ மற்றும் ‘சீதக்காதி’ போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

மேலும் இறுதிச்சுற்று படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பு ஆரம்பித்த விஜய் சேதுபதி அதன் பின்னர் பேட்ட, மாஸ்டர் என வில்லத்தனத்திலும் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மக்கள் செல்வன் என்ற பட்டத்தை பெற்றுள்ள விஜய்சேதுபதி மக்களின் விருப்பத்துக்குரிய நடிகராகவே மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இன்று பிறந்த நாள் கொண்டாடும் மக்களின் நடிகருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

More News

கிராம சபை கூட்டம் - பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய சில விளக்கங்கள்

இந்தியாவின் பொருளாதாரம் கிராமங்களில் இருந்து தான் தொடங்குகிறது என்றார் காந்தியடிகள். கிராமங்கள் தன்னளவில் தன்னிறைவு பெற்று விளங்கினால் மட்டுமே, பொருளாதார வளர்ச்சி நிலைமையில் முன்னேற்றம் பெற முடியும்.

விக்ரம் வேதா இயக்குனருடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

விஜய் சேதுபதி, மாதவன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை கணவன் மனைவி இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர்

பிரபல சீரியல் நடிகை தற்கொலை முயற்சி: சின்னத்திரையுலகில் பரபரப்பு!

பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை முயற்சி செய்துள்ளதால் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்முதலாக ஜோடி சேரும் மாதவன் - சமந்தா: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் மாதவன் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் பிளேபாய் கேரக்டர் முதல் முதிர்ச்சியான கேரக்டரை ஏற்று நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தர்பாரில் பிறந்த நாள் கொண்டாடிய 'மாஸ்டர்' விஜய்சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது 42வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் தொடர்ந்து