பிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Wednesday,December 05 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல்' வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய அடுத்த படமான 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்சேதுபதி தோன்றுகிறார். இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.. விஜய்சேதுபதி இன்றைய நிலையில் முன்னணி நடிகராக இருந்தாலும் நட்புக்காக ஒருசில படங்களில் சில காட்சிகள் நடித்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் ரஞ்சித் ஜெயகொடி இயக்கிய 'புரியாத புதிர்' படத்தில் நடித்த விஜய்சேதுபதி தற்போது அவருடைய அடுத்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மாகாபா, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த அப்டத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்.