பிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Wednesday,December 05 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல்' வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய அடுத்த படமான 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்சேதுபதி தோன்றுகிறார். இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயகொடி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.. விஜய்சேதுபதி இன்றைய நிலையில் முன்னணி நடிகராக இருந்தாலும் நட்புக்காக ஒருசில படங்களில் சில காட்சிகள் நடித்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் ரஞ்சித் ஜெயகொடி இயக்கிய 'புரியாத புதிர்' படத்தில் நடித்த விஜய்சேதுபதி தற்போது அவருடைய அடுத்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மாகாபா, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த அப்டத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்.

More News

பாடகியாக மாறிய மணிரத்னம் பட நாயகி

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' மற்றும் செக்க சிவந்த வானம்' படங்களில் நடித்தவர் நடிகை அதிதிராவ் ஹைத்தி. இவர் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

அஜித்தின் விஸ்வாசம் டீசரின் முதல் விமர்சனம்

அஜித் நடித்துள்ள விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பு

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் அமைச்சரவை சமீபத்தில் ராஜினாமா செய்ததால் அம்மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

If you are bad, I am your dad: 'மாரி 2' டிரைலர் விமர்சனம்:

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைவிட அசத்தலாக உள்ள இந்த படத்தின் டிரைலர் விமர்சனதை பார்ப்போம்

அஜித்தின் ஆர்வம் குறித்து ஜெர்மன் நிறுவனம் வெளியிட்ட தகவல்

தல அஜித் சமீபத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பிற்காக ஜெர்மனி சென்றபோது காலையில் படப்பிடிப்பிலும் மாலையில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள ஜெர்மன் விஞ்ஞானிகளை சந்தித்தார்