இந்த உலகத்துக்கு ஒரு பிரச்சனை வந்துருக்கு: விஜய்சேதுபதியின் வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த உலகத்திற்கு ஒரு பிரச்சனை வந்து உள்ளது என விஜய்சேதுபதி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் என அகில இந்திய நடிகராக மாறி பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பிளாஸ்டிக் பைகளை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த உலகத்தில் நம் எல்லோருக்கும் பிரச்சனை உள்ளது, ஆனால் இப்பொழுது இந்த உலகத்திற்கே ஒரு பிரச்சனை உள்ளது. அதை யாராவது என்றைக்காவது கேட்டிருக்கின்றோமா? இனிமேலாவது கேட்கவேண்டும். உலகத்தில் நாம் வாழ்வதற்கு ஆசையும் கனவும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இந்த உலகமும் ரொம்ப முக்கியம். நாம் சாப்பாட்டில் உப்பு, மசாலா போட்டு சாப்பிடுவோம், ஆனால் பிளாஸ்டிக் போட்டு சாப்பிடுவோமா? ஆனால் நாம் எல்லோரும் சாப்பிடுகிற சாப்பாட்டில் இந்த பிளாஸ்டிக் கலந்து உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாம் பயன்படுத்தும் இந்த பிளாஸ்டிக் மண்ணில், தண்ணீரில் கலந்து விலங்கு, மனிதன், பறவை, மீன் எல்லாவற்றையும் பாதிக்கின்றது. நாம் பயன்படுத்தி இரண்டு பொருட்கள் மட்டுமே மக்காது. ஒன்று இந்த உலகத்தில் நாம் செய்த பாவம், இன்னொன்று இந்த பிளாஸ்டிக். பாவத்தை புண்ணியத்தை வைத்து சரி பண்ணி விடலாம், ஆனால் பிளாஸ்டிக்கை எதனாலும் சரி பண்ண முடியாது. இதற்கு தீர்வு என்னவென்றால் நம்முடைய தாத்தா-பாட்டி பயன்படுத்திய மஞ்சப்பை. நம்மால் மாசுபட்ட இந்த உலகத்தை காப்பாற்ற இந்த மஞ்சப்பை மீண்டும் வந்துள்ளது. மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம், பிளாஸ்டிற்கு குட்பை சொல்லுவோம்.
Let's switch over to the alternatives!
— Greater Chennai Corporation (@chennaicorp) December 24, 2021
Stop using plastic #Chennai. Let's go back to our roots!#MeendumManjappai #மீண்டும்மஞ்சப்பை @CMOTamilnadu @supriyasahuias @GSBediIAS @VijaySethuOffl pic.twitter.com/s3nfEvGktN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments